Thank you! Download high quality plugins Easy to use theme’s admin panel Featured posts Featured posts Featured posts Featured posts Featured posts Featured posts

Friday, June 1, 2012

தமிழ்.கணேசமூர்த்தி

தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டத்திலுள்ள திருவேங்கடநாதபுரம் என்னும் கிராமத்தில் 1989 பிப்ரவரி மாதம் 27ந் தேதி தமிழ்வாசகன் - மல்லிகா தம்பதியினருக்கு தமிழ். கணேஷ் மகனாக பிறந்தார்.

பெயர்: தமிழ். கணேஷ் முர்த்தி
இயற்பெயர் : கணேசமுர்த்தி
புனைப் பெயர் : தமிழ் முர்த்தி,

தனது தொடக்க கல்வியை அதே கிராமத்தில் உள்ள ராதாசுவாமி தொடக்கப்பள்ளியில் தமிழ் கணேசமூர்த்தி கற்றார். மேலும் அவரது கிராமத்திலிருந்து 6 கி.மி தூரத்தில் பேட்டை என்ற நகரத்தில் உள்ள காமராசர் நகரமன்ற மேல்நிலைப் பள்ளி என்ற அரசு கல்வியகத்தில் தனது இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளி படிப்பினை தொடர்ந்தார்.

சமுகத்தின் மீது அதிக அக்கரை கொண்டிருந்த தமிழ்முர்த்தி பள்ளி படிப்பின்போதே இந்திய மாணவர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். பல்வேறு சமுக சேவை அறக்கட்டளைகளோடு இணைந்து அவர்களோடு தனது சமுக பணிகளை மேற்கொண்டு செய்து வந்தார்.

பள்ளி படிப்பின் போதே இணையதள வடிவமைப்பு, வீடியோ எடிட்டிங் மற்றும் புகைப்பட மெருகேற்றம் போன்ற பன்ஊடக கணினி அறிவையும் பொது அறிவையும் வளர்த்துக் கொண்டார்.

நண்பன்

தனது வளர்ச்சியின் மீதும் தன் மீதும் அக்கரை கொண்டவர்களை தமிழ். கணேஷ் ஒரு போதும் மறந்ததில்லை.
ஆதற்கு எடுத்துக்காட்டாக இன்றும் அவரது நினைவு தெரிந்த காலம் முதல்  இன்று வரை தன்னோடு படித்த, பணிபுரிந்தவர்களின் பெயர்களையும் அடையாளங்களையும் தன் மாணவர்களாகிய எங்களிடம் இன்றும் நினைவு கூறுவார்.

எடுத்துக்காட்டாக: 
மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்கள்
அசோக்குமார் , அப்துல் சக்கூர், துரை, தமிழ்கணேஷ்,கோபி கிருஷ்ணன் , 
கிருஷ்ண பெருமாள் , கணேசன, மனோகர், மதன் , முபாரக் அலி, முருசேசன் பெருமாள் , சிவசாமி, வினோத் , வேல்சாமி ஆகியயோர்.


முன்மாதிரி மனிதர்கள்:
டாக்டர். அம்பேத்கர்
சாதி மதத்தை கடந்து ஒன்று பட்ட சமுதாயத்தை படைத்திட பாடுப்பட்டவர்
அதற்காக ஏற்றத்தாழ்வினை சரி செய்திட இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்த ,ஈடு இணையற்ற மனித உருவில் பிறந்த மாணிக்கம்.

டாக்டர். அப்துல் கலாம்:
தென் தமிழகத்தில் பிறந்து உலகையே திரும்பி பார்க்கவைத்த மாமனிதர்.
மதசார்பற்ற மனிதர், குழந்தையுள்ளம் கொண்டவர், தேசத்தின் வளர்ச்சியை மனதளவில் கொண்டு செயல் அளவில் செய்து காட்டியவர்.

சானியா மிர்சா:
சிறிய வயதிலேயே அதிக அளவில் பேசப்பட்டவரகளில் எமது ஆசிரியருக்கு முன்னோடியானவர். டென்னிஸ் என்ற விளையாட்டினை இந்தியா அறிந்திட செய்தவரில் இவரும் ஒருவர்.

செய்தி-ஊடகத்துறை

தமிழ்மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்ததால் தமிழ் வளர்ச்சி சார்ந்த துறைகளையே தனது துறையாக தேர்வு செய்ய முடிவு செய்து தமிழ் நாளிதழ் ஒன்றில் வடிவமைப்பாளராக பணியில் சேர்ந்து தனது ஊடகவியல் வாழ்க்கையை தொடங்கினார். அந்த முன்னணி நாளிதழில் சுமார் 32 மாத காலம் பணிபுரிந்து பின்னர் தனது சொந்த மண்ணான திருநெல்வேலியில் புதிதாக வெளிவரவிருந்த தமிழ் நாளிதழில் சிறப்பு பக்க வடிவமைப்பாளராக சேர்ந்தார். பின்னர் செய்தி புகைப்பட நிபுணர், செய்தியாளர் (பயிற்சி), செய்தியாளர் என தனது தரத்தினை அகர முதலே படிப்படியாக வளர்ந்து வந்தார். பிறவியிலேயே கேள்வி அறிவு பெற்றிருந்த நமது நாயகருக்கு இத்துறை ஒன்றும் சிரமாக அமையவில்லை.

ராயலசீமாவில்….

ஆந்திர மாநிலத்தில் உள்ள ராயலசீமா பகுதியான திருப்பதியில் தொடங்கப்பட்டிருந்த லேடர் சர்வே இன்ஸ்ட்டியுட் ஆப் டெக்னாலஜி (LSIT)யில் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பிரிவை கையில் எடுத்து திறம்பட நடத்தி வெற்றி கண்டார். பின்னர் அதே தொழில்நுட்ப பயிற்சியகத்தில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

நோக்கம்

உயர் மதிப்பிற்குறிய தமிழ் கணேசமுர்ததி அவர்களை எங்களது ஆசிரியர் என்பதை விட வழிகாட்டி என்று கூறுவதே சால சிறந்ததாகும்.
அவரின் நோக்கங்கள் பலவாக இருப்பினும் அதில் முன் நிற்பது
தன்னை போன்ற சமுக சிந்தனையுள்ளவர்களை தேர்வு செய்து ஒரு தன்னலமில்லா சமுக தொண்டு சேவை நிறுவனத்தை நிறுவ வேண்டும் என்பதே ஆகும்.
அதற்கான நேரமும், வழியும் கிடைக்கும் வரை நான் காத்திருக்கபோவதில்லை.  அதனை நான் தேடிக் கொண்டே இருப்பேன் என்று ஆசிரியர் அடிக்கடி மனஒருங்கிணைப்பு கூட்டத்தில் கூறுவதை நாங்கள் மறந்து போவதில்லை.

மதத்தை ம(றந்)றுத்தவர்
எங்களது நாயகர் இதுவரை எங்களிடமோ வேறு யாரிடமோ தான் அந்த மதம், நான் இந்த மதத்தை ஆதரிக்கிறேன் போன்ற வார்த்தைகளை உபயோகித்ததே இல்லை.
நாத்திகத்தையும் தாண்டியவர்
ஒரு வேலை நீங்கள் நாத்திகத்தை ஆதரிக்கீர்களா? ஏன்று வினவினால்….
நான் நாத்திகவாதி என்று கூறுனால் அதுவே ஒரு மதமாக மாறிவிடும்.இன்றைய காலம் அப்படிதான் உள்ளது என்பார்.

ஏங்கேயும் சமநிலை
அய்யா, சார் போன்ற வார்த்தைகளை கொண்டு என்னை அழைக்க வேண்டாம். நீங்கள் என்னை நினைத்தாலே நான் புரிந்து கொள்வேன் அய்யா, சார் போன்ற வார்த்தைகளால் உங்களுக்கும் எனக்கும் உள்ள நெருக்கத்தை நான் விலக்கிட விரும்பவில்லை என்பார். ஆகவேதான் நாங்கள் அவரை ஆசிரியர். வழிகாட்டி, நாயகர் என கூறுகிறோம். இதனால் அவர் பேச்சை மீறாமலும் எங்கள் அன்பை வெளிகாட்டிடவும் முடிகிறது

ஏன்றும் அன்புடன்
ஆந்திரத்திலிருந்து
ராகேஷ்,
ராயபுரம் 
சென்னை. 103
செல்: 8801373689